துதிப் பாடல்கள்

தேவ உலகின் வேந்தரே

Deva Ulagin Vendharae

தேவ உலகின் வேந்தரே

தேவையுள்ள இடம் வந்தீரோ

ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ

பாலைவனம் இனி சோலையோ

1. கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை

மட்டாக வந்தவா எங்கள் பாலா

கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்

குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2)

2. பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்

நட்சத்திரம் வந்து நிற்பதேன்?

ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்

மானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு