தேவகுமாரன் இயேசுவே
ஏழைக்கோலம் எடுத்தீர்
என் போன்ற பாவிகள் மீறுதலால்
இரத்தமும் சிந்தினீரே... - 2
லாலாலாலா... லாலாலாலா... - 2
தாழ்மைக் கோலம் எடுத்தீர்
ஏழைக் குடிசையில் படுத்திருந்தீர்
பரலோக பாக்கியம் தந்திடவே நீர்
பரனாக வந்துதித்தீர்... - 2
சிலுவை மரம் சுமந்தீர் - அவர்
பாவ சாபத்தின் கூரொடித்தீர்... - 2
விண்ணாக மகிமையால் நிரப்பிடவே
இம் மண்மீது அவதரித்தீர்
அழகற்ற குருசினிலே - பல
பாடுகள் ஏற்றுக்கொண்டீர்... - 2
நன்றியால் எனதுள்ளம் பொங்கிடுதே
உம் அன்பிற்கே சேவை செய்வேன்