துதிப் பாடல்கள்

தேவன் மண்ணில் வந்தார்

Devan Mannil Vandhaar

ஆ...ஆ...ஆ...ஆ

தேவன் மண்ணில் வந்தார் - அன்பு

தேவன் மண்ணில் வந்தார்

மனிதன் இறையில் சேர

இறை மண்ணில் மனிதன் ஆனார் - 2

மனிதன் தவறிய போது

இறைவன் மீட்பை தெரிவித்தார்;

மீண்டும் மீட்பின் செய்தியை

வரலாற்றினிலே பலமுறை தெரிவித்தார்

காலம் நிறைவுற்றப்போது - கடவுள்

மகனை அனுப்பி வைத்தார்

ஞாலம் மீண்டும் இறையில் சேர

இயேசு பாலமாக வந்தார் - 2

இருளின் அடிமை நிலையில்

இருந்து விடுதலை தர வந்தார்

இயேசு அருளின் வாழ்வை

அவனியிலேதான் கொடையாய் தரவந்தார்

தந்தை தனது அன்பை இன்று

மகனில் முழுமையாக தந்தார்

மகனும் தனது அன்பை காட்ட

மண்ணின் மனிதனாக பிறந்தார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு