தேவனாம் கிறிஸ்து அழைக்கிறார்
கிருபையாய் இயேசு - அழைக்கிறார்
தேவாதி தேவனாம் இயேசு கிறிஸ்து உன்னைத்
தேற்றி ஆசீர்வதித்திட அழைக்கிறார். -2
அழைக்கிறார் ஆ! அழைக்கிறார்.
அன்பர் இயே கண்ட நெதிடுவாய் -2
1. ஓ! ... பாவமன்னிப்பை நிச்சயம் பெற்றிட
ஓ! ... பாவங்கள் அறக் கழுவப்பட்டிட
பரலோக தேவனின் அன்பினால்
பரம சிலாக்கியமான
பாவ மன்னிப்பின் பரிபூரண நிச்சயமாம்
பாக்கியமதைப் பெற்றிட வந்திடுவாய் -2
2 ஆ!... இரட்சகர் இயேசுவண்டை வந்திடுவாய்
ஆ!... இரட்சிப்பை உடனே அடைந்திடுவாய்
இரட்சகர் இயேசு உன்னையே
இரட்சித்திடவே அழைக்கிறார்
இரட்சகராம் இயேசுவண்டை உடனே நீ வந்து
இரட்சிப்பை உடனேயே பெற்றிடுவாய் -2
3.ஓ! ... உன்னைத் தம் இரத்தத்தால் கழுவிட
ஓ! - உன்னதர் தம் இரத்தமதைச் சிந்தினார்
பரிசுத்தர் இயேசு தம் இரத்தத்தால்
பாவங்கள் அற உன்னைக் கழுவி
சுத்திகரித்து உன்னைப் பரிசுத்தமாக்கியே
பரலோகம் சேர்த்திடுவார் வந்திடு -2
4.ஆ ! ... ஆத்துமாவை அழிவினின்று மீட்பவர்
ஆ! ... ஆத்துமாவை நரகினின்று காப்பவர்
அருமையான ஆத்தும நேசர்
அன்பின் தேவன் இயேசு தாமே க்கும்
ஆத்துமாவை மரணத்துக்கும் கண்ணைக் கண்ணீருக்கும்
ஆபத்துக்கும் தப்புவிப்பார் வந்திடு - 2
5. ஓ... உன்னத ஆவியால் உன்னை நிறைத்திட
ஓ... உன்னத பெலத்தால் உன்னைத் தாங்கிட
உன்னையே இயேசு தாம் அழைக்கிறார்.
உன்னத வாழ்வையே அளித்திட
உடனே உன் இயேசுவண்டை ஓடியே வந்திடு
உன்னத மோட்ச வீடை அடைந்திட -2