துதிப் பாடல்கள்

தேவனே எம் தேவனே

Devanae Em Devanae

தேவனே எம் தேவனே,

பரிசுத்த ஆவியைத் தாருமே

தாகம் தீருமே

பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே

பாலகராம் எமக்கு - உம்

பரிசுத்த ஆவியைப் பரிபூரணமாய்ப்

பகிர்ந்தளித்திடுவீர்

பரிசுத்த ஆவியினால் உண்டாகும்

சந்தோஷம் பொங்கிடவே - உம்

பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தையே உம்

பாலகர்க்கீந்தருளும்

தேவன்பின் வெள்ளமாம் பரிசுத்த ஆவியால்

உள்ளம் நிறைத்தருளும் - எம்

உள்ளம் பூரித்துப் பொங்கி மகிழ்ந்திடவே

தேவரீர் இரங்கும்

ஆவியின் நிறைவை அதிகமதிகமாயும்

அடியார்க்களித்து உம்

ஆறுதலையும் தேறுதலையும் தந்

தாசீர்வதித்தருளும்

பரிசுத்த நாமத்தின் மகிமையான

சாட்சியாய் வாழ்ந்திடவே - உம்

பரிசுத்த ஆவியின் பெலமதனையே

அளித்தாசீர்வதியும்

உன்னதரே உம் உன்னத ஆவியால்

உடனே கிரியை செய்யும் - உம்

உன்னத நாமத்தின் மகிமையை

யாவரும் காணச் செய்யும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு