தேவனே என் அடைக்கலம் நீரே
இயேசுவே, என் பெலனும் நீரே
துதித்து (-4) துதித்து பாடுவேன்-2
மகிழ்ந்து (-4) போற்றி பாடுவேன்-2
1. ஆபத்து காலத்தில் கூட
இருந்து காத்து வந்தீரே-2
அனுகூலமாக எனக்கு
துணை நின்றாரே -2
2. பூமி, மலை சமுத்திரத்தில்
சாய்ந்து போனாலும் -2
வெள்ளங்கள் பெருக்கினால்
பயப்பட மாட்டேன் -2
3. தேவனுடைய நகரத்திலே
ஒரு நதியுண்டு -2
உன்னத மக்களின்
கூடாரத்தை மகிழ்ச்சியாக்கும்-2
4. சேனைகளின் தேவன் நம்
நடுவில் இருக்கிறார் -2
அதிகாலை நேரம் நமக்கு
துணை செய்கிறார் -2
5. சண்டைகளை தடுத்து
தேவன் ஓய பண்ணுகிறார் -2
சமாதானம் தந்து நம்மை
மகிழ பண்ணுகிறார்-2
6. தேவ பாதம் அமர்ந்திருந்து
அறிந்து கொள்வோம் -2
இயேசுவே தேவன் என்று
உணர்ந்து கொள்ளுவோம் -2