துதிப் பாடல்கள்

தேவரீர் தேவரீர் தேவரீர் தேவரீர்

Devareer Devareer Devareer Devareer

தேவரீர் (4)

சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்

நீர் நினைத்ததொன்றும் தடைபடாது என்று நான் அறிவேன் - தேவரீர்

1.சிறையிலிருந்த யோசேப்பை

எகிப்தின் அதிபதி ஆக்கினீரே (2)

2.ஆடுகளை மேய்த்த தாவீதை

அரியணையில் நீர் அமரச் செய்தீர் (2)

3.சபையை ஒடுக்கின சவுலினையும்

சபைகளை ஸ்தாபிக்க வைத்தீரே

4.என்னை முழுவதும் தருகின்றேன்

உம் விருப்பம் என்னுள் நிறைவேற்றும் (2)

5.மீன்களை பிடித்த பேதுருவை

பிரதான அப்போஸ்தலன் ஆக்கினீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு