தேவரீர் சகலத்தையும் செய்திட நீர் வல்லவரே
நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது
ஒருவரும் தடை செய்ய முடியாது-2
1. அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே-2
உமக்கே ஆராதனை-3
2. உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஏதும் ஒன்றுமேயில்லை-2
உமக்கே ஆராதனை-3
3. எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவீர்
இது போன்ற காரியம் அநேகமுண்டு-2
உமக்கே ஆராதனை-3