துதிப் பாடல்கள்

ஈராயிரம் ஆண்டுகள் முன்

Eeraayiram Aandugal Mun

ஈராயிரம் ஆண்டுகள் முன்

மரியாளின் ஆண் மகனாய்

தெய்வ மைந்தன் தோன்றினார்

தேவன் பூவினில் வந்துதித்தார்

வான தூதர் சேனைத் திரள்

பாடும் தொனி கேளாய்

மானிடர் என்றும் வாழ்வாரே

தேவன் பூவினில் உதித்ததால்

எக்காளம் முழங்க தூதர் சேனை

பாடும் தொனி கேளாய்

மானிடர் என்றும் வாழ்வாரே

தேவன் பூவினில் உதித்ததால்

இராக்காலம் மந்தையைப் மேய்ப்பர்கள்

காக்கப் பேரொளி தோன்றியது

தூதர்கள் கூட்டம் முழங்கினது

பாடல் தூரத்தில் கேட்டது

யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்

பெத்லகேம் ஊர் வந்தனர்

பிள்ளையைக் கிடத்த இடமில்லை

தெய்வ மைந்தனுக்கிடமில்லை !

பெத்லகேம் சத்திர முன்னனை

மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார்

மரியாளின் மகனாய் தோன்றினார்

தேவன் பூவினில் வந்துதித்தார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு