எக்காலமும் இயேசுவே
சகாயராயிரும்
அன்பான சத்தத்தால் என்
ஏக்கம் நீககிடும்
எந்நாளும் நீரே வேண்டும்
எந்த நாளும் வேண்டும்
நீரே என்னை நோக்கி வாரும்
பேரன்பாரே
எப்போதும் இயேசுவே
இப்பாவியோடுயிரும்
தீயோனின் சோதனை
ஓயாமல் விலக்கும்
– எந்நாளும்
எக்காலம் இயேசுவே
எக்கேடும் நீக்கிடுமே
காருண்ய நாயக
நீரே என்னை ஆளுமே
எப்போதும் இயேசுவே
இப்பேதைக்கு இறக்குமே
மெய்ஞானம் சத்தியம்
செய்நன்றி போதியும்