எல்லாமே எனக்கு இயேசுதாங்க -
நின்னாலும் நடந்தாலும் விழுந்தாலும் எழுந்தாலும்
எல்லாமே எனக்கு இயேசு தாங்க ஓஹோ
வாழ்ந்தாலும் , தாழ்ந்தாலும் வந்தாலும் போனாலும்
எதுவான போதிலும் இயேசுதாங்க - 2
என்னோடு இருப்பவர் இயேசுதாங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயார் - 2 ஆமென்
கவலையிலும் கண்ணீரிலும் இயேசுதாங்க - 2
நம்ம கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இயேசுதாங்க - 2
வேதனையோ சோதனையோ வியாகுலமோ வியாதிகளோ -
எதுவந்த போதிலும் இயேசுதாங்க - நம்மோடு இருப்பவர் - 2
இயேசுதாங்க - அல்லேலூயா - எல்லாமே எனக்கு - -
ஆறுதலும் , தேறுதலும் இயேசுதாங்க - நம்மை
ஆற்றி தேற்றி அணைப்பதும் இயேசுதாங்க
நிந்தையான நேரத்திலும் தந்தையாக ஓடிவந்து
கண்ணீரைத் துடைப்பதும் இயேசுதாங்க - கரம் பிடித்து
சந்தோஷம் சமாதானம் - இயேசுதாங்க
நம்ம சந்ததியைக் காப்பவரும் இயேசுதாங்க
சங்கடங்கள் வந்தாலும் சஞ்சலங்கள் நேர்ந்தாலும்
சந்தோஷம் தருபவர் இயேசுதாங்க
சாகும்வரை காப்பவரும் இயேசுதாங்க - அல்லேலூயா