எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்திடவே
உம் ஆசி அள்ளித் தர வேண்டுமே
இல்லையென்ற சொல் என்றும் மறைந்திடவே
நீர் இருப்பதை நம்ப வேண்டுமே
வாழ்க்கை ஓடத்தில் நாங்கள் பயணியாகிறோம்
நீர் வழி காட்டும் எங்கள் இயேசுவே
இயேசு ராஜனே எங்கள் தேவ மைந்தனே
உம்மையன்றி வேறு தெய்வம் எங்கும் இல்லையே
இந்த மண்ணிலே நீரும் வந்த பொழுதிலே
மனிதம் புனிதம் ஆனதுதான் உந்தன் தயவிலே
நீர் நிலம் காற்று எல்லாம் நீர் தந்த பிச்சை
நீர் காப்பாற்றும் எங்கள் இயேசுவே
ஒரு தாயாக எந்த நாளுமே
நல்ல நாளில் அவதரித்த எங்கள் செல்வமே
இந்த நாளில் நாங்கள் உந்தன் செல்லப்பிள்ளையே
எந்த நாளும் மாறிடாத எந்தன் நேசரே
சொந்தமாக நீர் எனக்கு வந்த தெய்வமே
அன்று வந்த நீர் இன்று எங்களுடன் இருந்து
பாவங்களைப் போக்கிடவே பரிசுத்த மாக்கிடவே
இருதயத்தில் வாசம் செய்யும் ஆவியே
பரிசுத்த ஆவியே
கள்ளமில்லா உள்ளமெல்லாம் உம்மைத் துதிக்குதே
எல்லையில்லா இன்பத்திலே துள்ளிக் குதிக்குதே
மெல்ல மெல்ல உந்தன் ஆவி என்னை நிரப்புதே
அள்ள அள்ள குறைந்திடாத அன்பில் நனையுதே
இல்லம்தோறும் இந்தக் கிருபை வந்து வந்து பாய்ந்திடவே
நினைவு கூறவேண்டும் எங்கள் தெய்வமே உலகை
நினைவு கூறவேண்டும் எங்கள் தெய்வமே