துதிப் பாடல்கள்

என் ஆவியும் என் ஆத்துமாவும்

En Aaviyum En Aathumaavum

என் ஆவியும் என் ஆத்துமாவும் என் சரீரம்

என்றும் இயேசுவுக்கு

என் மனமும் என் உணர்வும் என் சித்தமெல்லாம்

என் தேவனுக்கு

என் காலங்கள் அவர் கரத்தில்

என் நேரங்கள் அவர் கணக்கில்

இணையேதுமில்லாத அன்பு தந்தென்னை

மீட்ட என் தெய்வ இயேசுவுக்கு

ஒரு நாளும் குறையாமல் நன்றி

சொல்வேனே நல்ல தேவாதி தேவனுக்கு

இருளையும் ஒளியையும் பிரித்தவர்

அந்த காற்றையும் கடலையும் படைத்தவர்

இந்த களிமண்ணான என்னை கரத்தில் வைத்துக்கொண்டு

அவர்க்கு பிரியமாய் வனைந்தவர்

ஒரு குறையும் இல்லாத நிறைவு தந்து என்னை

நேர்த்தியாக செய்து முடித்தவர்

இனி சோகங்கள் எனக்கில்லை

பெரும் பாரங்கள் எனக்கில்லை

ஆனந்தமாய் என் அப்பாவின் கரத்தில்

ஆயுள் முழுவதும் தப்பாமல் இருப்பேன்

விடுதலை தருகிற தேவனே

எனக்குள் விருப்பத்தை வைக்கிற ராஜனே

என்னைக் குறித்த உந்தனது நினைவு எப்பொழுதும்

நன்மைக்கேதுவாய் இருக்கிறதே

உம்மைப்பிடித்த நாள் முதலாய் விழித்த எனது கண்கள்

உண்மைக்கேதுவாய் நடக்கிறதே

இது உம்மாலே உண்டானது உள்ளம் தேனாக இனிக்கின்றது

ஆனாலும் என்ன ஒரு உற்சாகம்தானே

கானாவூர் கல்யாண கற்சாடி நானே

மறுபடி மறுபடி நினைத்தவர்

சொந்த மகனைப் போல நெஞ்சில் அணைத்தவர்

ஒரு வழியில்லாத என்னை குழியில் பார்த்தெடுத்து

விழியில் வைத்து என்னைக் காத்தவர்

ஒரு கழுகைப்போல என்னை சுமந்து கொண்டு வந்து

செட்டைக்குள்ளாக்கி மறைத்தவர்

இது ஆனந்த பாக்கியமே இதை எந்நாளும் பாடிடுவேன்

வாழ்ந்தாலும் இவ்வாழ்க்கை உம்மோடுதானே

வாழ்க்கையெல்லாம் இனி என் இயேசுதானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு