என் தேவன் பெரியவர் மகா உன்னதர்
வானம் கொள்ளாத தேவன் அவர்
என் தேவன் பெரியவரே
1. ஆபிரகாமிலும் பெரியவர்
இன்றைக்கும் உயிரோடிருக்கிறார் (2)
என் தேவன் யாக்கோபிலும் பெரியவர்
நித்திய ஜீவனை தந்திடுவார் (2)
2. சாலொமோனிலும் பெரியவர்
ஞானமும் நீதியும் தந்திடுவார் (2)
என் தேவன் யோனாவிலும் பெரியவர்
அவரை நான் உலகிற்கு சொல்லிடுவேன் (2)
3. தேவ ஆலயத்திலும் பெரியவர்
அவர் எனக்குள் ஜீவிக்கிறார்
என் தேவன் (என்) ஜீவனிலும் பெரியவர்
உயிராய் எனக்குள் வந்திடுவார் (2)