என் தேவனே எனக்கிறங்கும்
என் இராஜனே எனக்கிறங்கும்
என்னை கரம்பிடித்து என்னை நடத்திச் செல்லும்
நான் உம்மையே நம்பியுள்ளேன் - 2
வாழ்க்கை என்னும் படகினிலே
வீசும் கடும் காற்றால் பெரும் பாதிப்பே -2
இனி யார் எனக்கு துணை என்று எண்ணி - நான்
எங்கே போய் நிற்பேன் இயேசுவே உன் பாதத்தில் நிற்பேன்
நடக்கும் போது கால் வழுக்குகிறதே
எடுக்கும் போது கை தவறுகிறதே - 2
நான் என்ன செய்வேன் என் நிலைமையெண்ணி
யாரிடம் போய்ச் சொல்வேன் இயேசுவே
உம்மிடம் தான் சொல்வேன்
வனாந்திரமே என் வாழ்க்கையையா
வாடி வதங்கியதே மேன்மையையா
தடுமாறுகின்றேன் நான் தத்தளிக்கிறேன்
தாகத்தை யார் தீர்ப்பார் இயேசுவே
தாகத்தை நீர் தீர்ப்பீர்