என் கண்கள் முழுவதையும் நான்
உன் மேல் வைத்து விட்டேன்
என் காலம் எல்லாமே நான் உன் கையில்
கொடுத்துவிட்டேன்
உம்மைத் தவிர உலகை இனிமேல்
திரும்பி பார்க்க மாட்டேன்
இந்த மண்ணில் நான் வாழ்ந்தாலும்
உம்மில் நான் வாழ்வேன்
நீர் தானே என் சொந்தமே
இந்த மண்ணில் நான் மாய்ந்தாலும்
உம்மில் நான் வாழ்வேன்
நீர் தானே நிரந்தரம்
1.இரதங்களைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
குதிரையை குறித்தும் மேன்மை எனக்கில்லை
என் யேகோவா தேவன் நீரே என் மேன்மையெல்லாம்
உம்முடன் வாழ்வது தானே என் ஏக்கமெல்லாம்
2. பேரைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
புகழைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
என் இயேசு ராஜா நீரே என் மேன்மையெல்லாம்
உம்முடன் நடப்பது தான் என் ஏக்கமெல்லாம்
3. உயிரைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
உடலைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
தூய ஆவி நீரே என் மேன்மையெல்லாம்
நீர் எனக்கு வாழ்வதுதான் என் ஏக்கமெல்லாம்
உயிரே .. உயிரே .. உமக்காய் வாழ்வேன்
உயிரை கூட உமக்காய் தருவேன்