துதிப் பாடல்கள்

என் கன்மலையாகிய கர்த்தாவே

En Kanmalaiyaagiya Karthaavae

என் கன்மலையாகிய கர்த்தாவே

நான் உம்மை கூப்பிடுவேன்

உம் பரிசுத்த சந்நிதி நேராக

என் கைகளை ஏறெடுப்பேன்

என் சத்தத்தை கேட்டருளும் - 2

1, நீர் பெலனும் கேடகமானதினாலே இருதயம் நம்பிடுதே - 2

உம்மாலே சகாயம் பெற்றதினாலே பாட்டினால் துதித்திடுவேன்

உயர்த்தி போற்றிடுவேன் - 2

உம்மை போற்றிடுவேன்

2, நீர் அபிஷேகம் பண்ணின அடியானுக்கு அரணான கேடகமே - 2

உம்மை நம்பின என்னையும் என்றும் கை விடாதவரே

விட்டு விலகிடாதவரே - 2

தோள் மீது சுமப்பவரே

3, நீர் ஜனங்களை ரட்சித்து விடுவித்து என்றும் ஆசீர்வதித்திடுமே - 2

யோசித்து நடத்தி என்னை என்றும் உயர்த்தி மகிழ்ந்திடுவார்

என்னையும் உயர்த்திடுவார் - 2

என்றும் நடத்திடுவார்

என் கன்மலையாகிய கர்த்தாவே நான் உம்மை கூப்பிட்டேன்

உம் பரிசுத்த சந்நிதி நேராக கைகளை ஏறெடுத்தேன்

என் சத்தத்தை கேட்டவ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு