துதிப் பாடல்கள்

என் கண்ணீரை காணும்

En Kanneerai Kaanum

என் கண்ணீரை காணும் தேவன் உண்டே

பாலை வனமான வாழ்க்கையில்

கண்ணீரை மாற்றி

ஜீவனை தேற்றி

மகிழ்ச்சியால் நிறைத்திடுவாரர்

அன்னாளை போல தாழ்வடைந்தாலும்

ரூத்தை போல துக்கம் சூழ்ந்தாலும்

அற்புதம் செய்யும் என் தேவன் உண்டு

கசப்பை களிப்பாய் மாற்றிடுவார்

தாவீதைப் போல துன்பம் நேர்ந்தாலும்

மோசேயைப் போல சிறுமை பட்டாலும்

என் இயேசு என்றும் மாறாத நேசர்

எனக்கு சமாதானம் தந்திடுவார்

நிந்தைகள் வந்தும் அவமானம் வந்தும்

மனிதர்கள் என்னை வஞ்சித்த போதும்

தேவன் எந்தன் தஞ்சம் ஆனார்

நம்பியதை நானும் பெற்றிடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு