1. என் கண்ணீர்கள் யாவையும் துடைக்கும் நேசரே துடைத்திடுமே
இனி துக்கமில்லை துயரமில்லை துன்பமில்லை என் வாழ்விலே (2)
2. சகலமும் புதிதாக்கும் எங்கள் நேசரே புதிதாக்குமே (2)
இனி பழமையில்லை, பாவமில்லை, பாரமில்லை, பரிசுத்தமே - என்
3. ஜெயத்தைக் கொடுக்கும் எங்கள் நேசரே - கொடுத்திடுமே
இனி சோர்வு இல்லை, அசதியில்லை, தோல்வியில்லை என்றும்
ஜெயமே என் வாழ்விலே (2)
4. என் தேவைகள் சந்திக்கும் எந்தன் நேசரே - சந்தியுமே (2)
இனி பஞ்சமில்லை, பசியுமில்லை, வறுமையில்லையே
சம்பூரணமே- என் வாழ்விலே (2)
5. பெலவீனம் நீக்கிடும் எங்கள் நேசரே - நீக்கிடுமே (2)
இனி சாபமில்லை, வியாதியில்லை, நோயுமில்லை,
பெலனானேனே - என் வாழ்விலே (2)