துதிப் பாடல்கள்

என் கோட்டையானவர்

En Kottaiyaanavar

என் கோட்டையானவர், என் அரணானவர்,

என் தேவனானவர், என் ஜீவனானவர் - 2

எந்தன் ஆற்றலாய் இருக்கின்றவர்

எந்தன் அன்புக்கு சொந்தமானவர் - 2

என் அடைக்கலம் வலிமையுமவர்

எதிரியினின்று என்னை மீட்டவர் - 2

துன்ப வேளையில் நான் கூப்பிடும் போது

ஆலயத்திலே என் குரலை கேட்பவர் - 2

எந்தன் விளக்கை சுடர்விடச் செய்தார்

எந்தன் இருட்டை வெளிச்சமாக்கினார் - 2

மான்களைப்போல விரைந்திட செய்தார்

உயர்ந்த இடத்திலே என்னை நிறுத்தினார் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு