என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்லை
ஒருநாளும் தலைகுனிவு எனக்கு இல்லை
இல்ல இல்ல தோல்வி இல்ல இல்ல -2
இல்ல இல்ல கலக்கம் இல்ல இல்ல -2
நீதிமானை சோதித்து அறிகிறீர்
சுத்த பொன்னாக ஜொலித்திட செய்கிறீர் -2
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை -2
என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர் -2
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் -2
சாத்தானின் தந்திரங்கள் அறிந்தவன்
சர்வ வல்லவரின் ஆயுதங்கள் அணிந்தவன் -2
கிறிஸ்துவுக்குள் இருப்பதினால்
ஜெயமாக வாழ்ந்திடுவேன் -2