என் நாவினால் உம் நீதியை ஒவ்வொரு நாளும் பாடுவேன்
என் காதினால் உம் சத்தத்தை கேட்க ஆவல் கொண்டேன்
நீரே போதும் எனக்கு போதும் ஜீவன் வாழ
இயேசு நீரே போதும் - 2
உத்தமரின் நாட்கள் கர்த்தர் நீர் அறிவீர் - 2
நீதிமான்களையோ கர்த்தர் தம் கரத்தில் ஏந்தித்தாங்குகிறீர் - 2
கர்த்தருடைய கையில் அலங்காரமுமான கிரீடம் - 2
தேவனுடைய கரத்தில் நான் இராஜ முடியுமாயிருப்பேன் - 2
என் பெலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும் அல்ல
கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
சபையிலே நான் துதிப்பேன் உம் பிரசன்னம் இறங்கி வருமே - 2
ஏகமாய் நான் கரங்களைத் தட்டி உம்மை போற்றுவேன் - 2
முழங்கால்கள் முடங்கும் என் நாவுகள் என்றும் முழங்கும் - 2
இயேசு கிறிஸ்து சொன்னாலே என் வாழ்வில் எல்லாம் நடக்கும் – 2