என் நெஞ்சம் தேவ ஆவியால்
நிறைந்து வழிந்தோடும் - 2
என் உள்ளம் தேவ அன்பால்
நிறைந்து என்றும் பொங்கிடும் - 2
என் நெஞ்சம் தேவ ஆவியால்
நிறைந்து வழிந்தோடும்
ஜீவ நதிகள் என்னில்
இருந்து பாய்ந்தோடும்
லாலா லா ல்லா லாலா
லாலா லா ல்லா லாலா
பயங்கள் அணுகிடாது
துயரங்கள் சேர்ந்திடாது
சோதனை வென்றிடாது
வேதனை தொடர்ந்திடாது
வென்றிடுவேன் வெற்றி சிறந்திடுவேன்
சிறந்து விளங்கிடுவேன் உம் நாமத்தால்
தரிசனம் நீர் தந்தது
அழைப்புமே மாறாது
ஜீவனும் நீர் தந்தது
ஆளுகை நீர் தருவது
சத்துரு எதிர் வந்தாலும்
வெள்ளம் போல் கொடி பிடிப்பார்
முடிவுகள் நாம் செய்தால்
முடிப்பது அவர் செய்வார்