என் பாவங்களை எல்லாம் அறிக்கை செய்கிறேன்
இனி பாவம் செய்யாமலே என்னை
காத்துக்கொள்ளும் இயேசுவே-2
கெஞ்சி கேட்கிறேன் சிறுபிள்ளை போலவே
உந்தன் கிருபையால் என்னை மன்னியும்
இயேசுவே - 2
கண்களால் நான் செய்த பாவங்களை
கழுவியருளும் என் இயேசுவே
கரங்களால் நான் செய்த பாவங்களை
காணாமல் செய்யும் என் இயேசுவே - 2
நாவினால் நான் செய்த பாவங்களை
நடுக்கடலில் போடும் என் இயேசுவே
உள்ளத்தால் நான் செய்த பாவங்களை
உதறித் தள்ளும் என் இயேசுவே-2
பெருமையால் நான் செய்த பாவங்களை
வெறுமையாக்கும் என் இயேசுவே
இச்சையால் நான் செய்த பாவங்களை
இல்லாமல் செய்யும் என் இயேசுவே-2
ஆத்மாவில் நான் செய்த பாவங்களை
அழித்து போடும் என் இயேசுவே
சரீரத்தால் நான் செய்த பாவங்களை
சாம்பலாக்கும் என் இயேசுவே-2