என் சமூகம் உனக்கு முன்பாய்ச் செல்லும்
நம்பிக்கையோடே கடந்து போ
நீ செய்கிறதெல்லாம் வாய்க்கச் செய்வேன்
தொடர்ந்து நீயும் போராடு-2
பார்வோன் சேனைகளா-இல்லை
பரந்த செங்கடலா-2
பச்சைப்புழுக்களும் வெட்டுக்கிளிகளும்
மென்று தின்ற வருடம்-இனி
இரட்டிப்பாகவே நன்மை கிடைத்திடும்
இனியும் இல்லை வருத்தம்-2
நான் உன்னோடு நடந்திடும்போது
ஒரு நன்மையும் குறைவுபடாது
வாடும் வயல் வெளியா-இல்லை
வறண்ட பூமிகளா?
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
உன்னில் பழுது இல்லை-நான்
உந்தன் நோய்களை சுமந்து தீர்த்ததால்;
உனக்குள் வியாதி இல்லை-2
உன் சுகத்தினை விரும்புகிறேனே
அவன் நுகத்தினை முறித்திடுவேனே-2
வியாதியின் கொடுமைகளா-இல்லை
வேதனைத் தழும்புகளா?
உன்னைக் கெடுத்திடும் உலகம் கொடுத்திடும்
ஒன்றும் தேவையில்லை-நான்
என்னைக் கொடுத்து உன் உயிரை மீட்டதால்
உனக்கு கவலை இல்லை-2
ஒரு நதி போல் உன் சமாதானம்
உன் எல்லையில் பாய்ந்திடச்செய்வேன்
எரிகிற சூளைகளா-இல்லை
எதிரியின் சூழ்ச்சிகளா?
சேஷ்டபுத்திரன் பிரியமானவன்
விசேஷித்தவன் நீ-நான்
பாதை காட்டிட பரிந்து பேசிட
தெரிந்து கொண்டவன் நீ
என் இதயத்துக்கேற்றவன் நீயே
என் ஆடுகளை மேய்ப்பாயே
இனியும் கவலைகளா-இல்லை
இருளின் கிரியைகளா?