என் சத்தத்திற்கு செவி சாய்க்கும் தேவன் நீரே
என் கூக்குரலை கேட்பீரே
உம் நாமத்தை அறிந்தவன் நீதிமான்
அவனே பாக்கியவான்
உம் சத்தியமாம் வெளிச்சத்தில் நிதம் நடத்தி
உம் உத்தமத்திலே என்றும் தாங்கிடுமே
உம் இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்ததால்
உற்சாகமாய் உம்மை ஸ்தோத்தரிபேனே
அக்கினி சூளையில் நடக்கும் போது
அவிந்திடா காத்தவரே
ஆழியில் தண்ணீரை கடக்கும் போது
அமிழ்ந்திட காத்தவரே
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்து
ஆறுதல் அளித்த உம்மை ஸ்தோத்தரிபேனே
வலப்பக்கமும் என் இடப்பக்கமும்
நிழலாக வந்தவரே
வலிமையின்றி நான் வாடும் போதும்
வழுவாமல் காத்தவரே
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
வாழ்நாளெல்லாம் உம்மை ஸ்தோத்தரிபேனே
என் பாவம் யாவும் போக்கிடவே
உம் இர த்தம் சிந்தினீரே
என் நோய்க்கள் யாவும் நீக்கிடவே
உம் ஜீவன் தந்தீரே
என் வாழ்வின் கட்டுகளை உடைத்தெறிந்து
வெற்றி பெற செய்த உம்மை ஸ்தோத்தரிபேனே