என் செல்லம் நீங்கதான் இயேசைய்யா
என் செல்வம் நீங்கதான் இயேசைய்யா
விலையேறப்பெற்றவரே என்னை
ஆளும் பரிசுத்தரே
ஆராதனை ஆராதனை
பாவியான என்னை நேசித்தீரே
துரோகியான என்னை அணைத்தீரே
உடைந்து போன என்னை உருவாக்கியே
வெறுமையான என்னை உயர்த்தினீரே
மண்ணை போன்ற என்னை மாற்றினீரே
மணவாட்டியாக்கி மகிழ்ந்தீரே
பரலோகில் என்னை சேர்த்திடவே
பூலோகில் எனக்காய் மரித்தீரே