என் தேசம் இயேசுவைக்காண
மனம் இரங்கி வாருமைய்யா-2
கர்த்தர் நாமம் மகிமையடைய
கர்த்தாவே நீர் வாருமையா-2
1. தேவனை அறியா தேசமிது - உண்மை
தெய்வத்தை தேடி அலைகின்றது
இரட்சகரே நீர் வெளிப்படுமே-2 இயேசு
இரட்சிப்பு உம்மாலே தான் வருமே - தேச
2. தேவைகள் நிறைந்த தேசமிது
தேவனை அறியா வாழ்கின்றது-2
தேசமே உன்னைத் தருவாயா-2 என்
தெய்வம் தரும் ஆசீர் பெற்றிடவே-2 இயேசு
3. பரந்து விரிந்த பாரத தேசம்
பக்தியிலே மிகச் சிறந்த தேசம்
பக்தகோடிகள் நிறைந்த தேசம்
பரிசுத்தமின்றி வாழ்கின்றதே
பரமனைத் தேட தடுக்கின்றதே
பரிசுத்த தெய்வமே நீர் வாருமைய்யா
பாரத தேசத்தை பாருமையா- எங்கள்