துதிப் பாடல்கள்

என் வாழ்வும் நீரய்யா

En Vaazhvum Neerayyaa

என் வாழ்வும் நீரய்யா

என் தாழ்வும் நீரய்யா - 2

எனக்குள்ளே வாழும் ஏசய்யா - 2

என்னை நடத்திடுமே - 2

உணவும் உடையும் தருபவரே

உம்மை விட்டால் வேறு யாருமில்லை - 2

உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ்தான் - 2

பாடி மகிழ்ந்திடுவேன் (நான்) - 2

உலக தோற்றம் முதற்கொண்டு

என்னை நீரே தெரிந்துகொண்டீர் - 2

நான் வாழும் நாட்கள் உம் கிருபை - 2

காலங்கள் உம் கரத்தில் (என்) - 2

பிரியமானவள் (ன்) என்றழைத்து

பிரியமாய் என்னை நடத்துகின்றீர் - 2

நீரில்லை என்றால் நானும் இல்லை - 2

நீரே என் வாழ்வின் எல்லை (என்) - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு