துதிப் பாடல்கள்

என் இயேசு ராஜன் என்னுள்ளம்

En Yesu Raajan Ennullam

என் இயேசு ராஜன் என்னுள்ளம் வந்தார்

எந்நாளும் பாடிடுவேன்

ஆர்ப்பரிப்போம் அல்லேலுயா

ஸ்தோத்தரிப்போம் அல்லேலுயா

ஆயிரம் நாவுகள் எனக்கிருந்தாலும்

உம்மைப்பாட போதாதையா

அக்கினி நாவுகள் எனக்கு தந்தீரே

அல்லேலூயா பாடிடுவேன்

சபையில் எம்மை துதிக்க வைத்தீரே

சத்தியபரனே அல்லேலுயா

சாத்தான் சேனையை ஜெயிக்க வைத்தீரே

வெற்றிவேந்தனே அல்லேலுயா

துதியின் ஆடையை எனக்குத்தந்தீரே

துதித்து பாடி மகிழ்ந்திடுவேன்

துதிக்கும் தூதர் சேனையோடிணைந்து

துதி பலி செலுத்தி கொண்டாடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு