என் இயேசு ராஜனே எங்களின் தேவனே
எத்தனை மகத்துவம் உந்தனிலே
மன்னவர் இயெசுவே மாசில்லா ராஜனே
மகிமை நிறைந்த எந்தன் மன்னவரே
ஒத்தாசை அனுப்பி உறங்காமல் காக்கும்
உயர்வான தேவனுக்கு மகிமை
உண்மையில் என்னை உம்பக்கம் இழுக்கும்
உன்னத ராஜனின் கிருபை
இரக்கம் கருணையினால் உம் பக்கம் வந்தேன்
இதற்கு ஈடாக நான் என்ன தருவேன்
உலகத்தை மீட்க ஒரு ஜீவன் தந்த
உயர்வான இயேசுவுக்கு மகிமை
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தாலே
விடுவித்த ராஜனின் கிருபை
உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லை
தேடிப்பார்த்தாலும் தென்படவில்லை
தெய்வீக அன்பை எனக்குள்ளே ஊற்றும்
பரிசுத்த ஆவிக்கு மகிமை
வலக்கரத்தை நீட்டி வல்லமையைக்கூட்டி
அடியேனைத்தொடுகின்ற கிருபை
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
கனிகள் கொடுக்கும் நல்ல சாட்சியாய் மாற்றும்