துதிப் பாடல்கள்

எனக்காய் கதறும்

Enakkaay Kadharum

எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே

எனக்காய் மரித்த என் இயேசு வல்லவரே

கஷ்டங்களில் எந்தன் துணை அவரே

கண்ணீரெல்லாம் துடைப்பார்

மரணத்தின் பாதையில் நடந்தாலும்

மாறாத வாக்கு உண்டு

இருள் சூழ்ந்த பாரங்கள் நெருக்கினாலும்

இமைப் பொழுதேனும் மறவாதவர்

இருக்கின்றவராக இருக்கின்றாரே

இன்றும் என் ஜெபம் கேட்பார்

வியாதியால் சரீரம் வாடினா லு ம்

வல்லமை தாங்கிடுமே

ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே

ஆற்றுவார் அன்பினாலே

பரலோகில் உம்மையல்லால் யார் எனக்கு

புவியில் விருப்பம் வேறில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு