எந்த பொல்லாத வல்லமையும்
இல்லாமல் போகட்டும்
எல்லாம் வல்ல இயேசு நாமத்தினால்
அவை சொல்லாமல் கொள்ளாமல்
நில்லாமல் ஓடட்டும்
எல்லாம் வல்ல இயேசு நாமத்தினால்
சோதிக்க நினைக்கும் சாத்தானுக்கெதிராய்
சாதிக்கத் தூண்டும் என் இயேசு கிறிஸ்துவின்
வல்லமை இறங்கட்டும்-வல்லமை இறங்கட்டும்
எத்தனை எதிரிகள் எழும்பி நின்றாலும்
அத்தனையும் சுக்கு நூறாக்கிப்போடும்
அக்கினி இறங்கட்டும்-அக்கினி இறங்கட்டும்
இயேசென்று சொன்னாலே நடுங்கட்டும்
பின்னாலே ஒதுங்கட்டும்
எந்நாளும் எதிரிக்கு ஏமாற்றமாய்
அவர் முன்னாலே நிற்காமல் தன்னாலே சிதறட்டும்
இந்நாளில் இந்த ஜெயம் இயேசுவுக்காய்
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு
அத்தனையும் அது ஆண்டவரின் படைப்பு
என்னோடு இணையட்டும்-என்னோடு இணையட்டும்
சூரிய சந்திர நட்சத்திரங்களெல்லாம்
ஓரிணையாக என்னோடு இணைந்து
யுத்தங்கள் புரியட்டும்-யுத்தங்கள் புரியட்டும்
இயேசு இல்லாத ஒரு இடம்
இல்லாமல் போகட்டும்
எல்லா இடமும் இயேசு ஆளுகைக்காய்
அவர் சொல்லாத ஒரு மொழி செல்லாமல் போகட்டும்
அல்லேலுயா மட்டும் தேவனுக்காய்
ஆகாய மண்டலப் பொல்லாத சேனைகள்
வானத்தில் இருந்து மின்னலைப்போல
விழுந்து நொறுங்கட்டும்-விழுந்து நொறுங்கட்டும்
பரத்திலிருந்து ஒத்தாசை இறங்கி
துரைத்தனம் பண்ணும் சத்துருவின் சேனையை
துரத்தி அடிக்கட்டும்-துரத்தி அடிக்கட்டும்
அந்தப் பொல்லாங்கன் எய்திடும்
எல்லா அஸ்திரங்களும் வாய்க்காமல்
அவன் பக்கம் திரும்பட்டுமே
எங்கள் போராயுதம் மாம்சம் இல்லாததால்
தேவ சர்வாயுதம் என்னை மூடட்டுமே