எந்தையே இயேசு தேவா உந்தன் பாடை
யாரால் வர்ணிக்கலாகும் - 2
ஆயிரம் நாவிருந்தாலும்
அதைச் சொல்லி வர்ணிப்பதும் அரிது - 2
கெத்சமனே தோட்டமுதல் உந்தன் பாடை
கொல்கொதா தான் வரைக்கும் - 2
ஆரால் வர்ணிக்கலாகும் ஆச்சரியம்.
ஆரால் வர்ணிக்கலாகும் - 2
உந்தன் பாடை நினைத்து எந்தன் உள்ளம்
உருகியே போகுதையோ - 2
கல்மனதும் கரையும் காதலன்.
உந்தன் பாட்டை நினைத்தால் - 2
கல்லாம் நெஞ்சுடை பாவி
வந்திடுவாய் காதலரண்டை இன்று - 2
கல்மனதும் உருகும் நேசரின்
கஸ்திப் பாட்டை நினைத்தால் - 2
கெத்செமனே தோட்டமதில் பாடுபட்டு
இரத்த வியர்வை வடியும் போது - 2
பரலோகத்தின் தூதன் கண்டு பரிதவித்து
வந்ததும் ஆச்சரியம் - 2
கல்தூணில் கட்டி வைத்து போர் சேவகர்
ஆறுபேர் அடிக்கும் போது - 2
தங்கத் திருமேனியும் திரு சரீரம்
கீறிப் பிளர்ந்ததையோ - 2
கட்டு அவிழ்க்கும் வேளையில்
இரத்தத்தில் கமந்து விழுந்த காட்சி - 2
தாங்க முடியவில்லை என்னால்
இது சகிக்க முடியவில்லை - 2
துஷ்ட மனம் துடிக்கும் எந்த எந்த
கல் மனமும் கரையும் - 2
கடின உள்ளம் உருகும் காதலியின்
கஸ்திப் பாட்டை நினைத்தால் - 2
பாவத்தின் பாசத்தினால் கடினப்பட்டு
பாவியே வந்திடுவாய் - 2
அன்பால் அழைக்கிறாரே உன்ன
அவர் சொந்த தாக்கிட - 2
முள்முடி சூட்டப்பட்டு மூன்றாணியில்
துடிதுடிக்கும் காட்சியை - 2
தாங்க முடியவில்லை என்னால்
சகிக்க முடியவில்லை - 2
என் நேசரே காதலரே என்
அருமைப் பிதாவே - 2
என்னதான் ஈடுசெய்வேன் இதற் கெல்லாம்
என்னதான் ஈடுசெய்வேன் - 2