துதிப் பாடல்கள்

எந்தன் ஜெபபலிபீடமே

Endhan Jebabalibeedamae

எந்தன் ஜெபபலிபீடமே உம் சமூகத்தில்

உகந்த பலியாய் என்னை படைத்தேன்

பிரதான ஆசாரியனே துதிபலியதை ஏற்றிடுமே

அக்கினியால் சுட்டெரிக்கும் சுகந்த வாசனையால் தேற்றிடுமே

பாத்திரங்கள் நிரப்பப்பட பந்திகளும் நிறைவடைய

போஜன பலியதை செலுத்திடுவேன்

வானத்து மன்னாவால் போஷித்திடும்

அறியாமல் செய்த குற்றத்திற்கும்

பிறர்க்கு இழைத்த துன்பத்திற்கும்

சர்வாங்க தகனபலி செலுத்திடுவேன்

இன்றே என் பாவத்தை மன்னியுமே

வீட்டிலுள்ள குழப்பங்கள் அகல

குடும்பத்திலே தேவசமாதானம் பெறுக

சமாதான பலியதை செலுத்திடுவேன்

இன்றே உம் சமாதானம் தாருமையா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு