எந்தன் மீட்பரே
எந்தன் கன்மலையே
நான் உயிரோடிருக்கும் மட்டும்
என் இயேசுவின் புகழ் பாடுவேன்...
எளியவன் என் மீது இரக்கம் வைத்தீர்
என்னையும் உமக்கென்று தெரிந்து கொண்டீர்
எனக்கொரு புதுவாழ்வை கொடுத்து விட்டீர்
எனக்காக யாவும் செய்து முடித்தீர்
- நான் உயிரோடிருக்கு மட்டும்
சகலத்தையும் செய்ய வல்லவரே - நீர்
செய்ய நினைத்தது தடைபடாது
சத்திய வாழ்வை அறிய செய்தீர்
நித்திய பாதையில் நடத்துகின்றீர்
- நான் உயிரோடிருக்கு மட்டும்