துதிப் பாடல்கள்

என்ன நான் பாடுவேன் எப்படி

Enna Naan Paaduven Eppadi

என்ன நான் பாடுவேன் எப்படி பாடுவேன்

எதைச் சொல்லி பாடுவேன் என் இயேசு ராஜாவை

அவர் பெயரைச் சொல்லும் தகுதி எனக்கு இல்ல

அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை

அவர் அன்பைப்பாடும் அறுகதையும் இல்ல

அந்த அன்பில்லாம வாழ்வு எனக்கு இல்ல

பாவி என்னை மீட்டதை நான் பாடுவதா - 2

பாசம் வைத்து காத்ததை நான் பாடுவதா - 2

கண்ணுக்குள்ள என்ன வச்சி கனிவோடு காத்ததை

என்ன சொல்லி பாடுவேன் எப்படி புகழுவேன் -

தாயைப் போல் தேற்றுவதைப் பாடுவதா

தந்தைப்போல் தாங்குவதைப் பாடுவதா

உள்ளங்கையில் என்ன வச்சி உறங்காமல் காப்பதை

என்ன சொல்லி

நீசன் என்னை நேசித்ததைப் பாடுவதா

நித்தம் வழி நடத்துவதைப் பாடுவதா

சொந்த பந்தம் விலகினாலும் நிழலாகத் தொடர்வதை

என்ன சொல்லி - பெயரை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு