துதிப் பாடல்கள்

என்னாலும் துதித்திடுவேன்

Ennaalum Thudhithiduven

என்னாலும் துதித்திடுவேன்

என் நேசர் இயேசுவை

எண்ணங்கள் கவர்ந்தவரை

என்றுமே பாடிடுவேன் - 2

என்னாலும் துதித்திடுவேன்

1. இரக்கம் கிருபை மன உருக்கம்

அன்பின் பிறப்பிடமே - 2

உம் பண்புகளை சொல்லி முடியா

உயர்ந்தவரே சிறந்தவரே - 2

உயர்ந்தவரே சிறந்தவரே

2. சேரக்கூடாத ஒளியில்

நீர் வாசம் செய்பவரே - 2

உம் நன்மைகளை எண்ணி முடியா

நல்லவர் வல்லவரே - 2

நல்லவர் வல்லவரே

3. புது பாடல் தந்த தேவா

புகழ் மாலை சூடுவேன் - 2

உம் புண்ணியங்கள் ஒவ்வொன்றாக

புகழ்ந்து பாடிடுவேன் - 2

புகழ்ந்து பாடிடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு