என்னை ஆட்கொண்ட என் இயேசுவே
என் ஆறுதலின் நாயகர் நீரே
நீர் தந்த ஆவி என்னிலே என் நாளும் தீபமானதே
விண்ணகத்து மகிமையெல்லாம் நான் காணவே
வேதத்தின் இரகசியத்தை நீர் தருகின்றீர்... - 2
வேதத்தின் வெளிச்சத்திலே நான் நடக்கவே
எந்தனின் உள்ளத்தினை நீர் நடத்துமே... - 2
இளைத்த மனிதனுக்கு சமயத்துக்கு ஏற்ற வார்த்தை
சொல்ல கல்விமானின் நாவைத்தந்தீரே... - 2
காலை தோறும் என்னை நீர் எழுப்பியே
உமது கிருபையாலே எனை நிறைக்கிறீர்... - 2
கொடுரமானவரின் சீறலைகள் மதிலை மோதி
அடிக்கும் வெள்ளம்போல் வருகிற போது
ஏழைகளின் பெலன் நீரையா - எளியவரின்
திடன் நீரையா... - 2 (என்னை ஆட்கொண்ட...)
இரண்டு மனுவை நான் உம்மிடத்தில் கேட்கிறேன்
மரிக்கும் பரியந்தம் மறுக்காமல் தாரும்... - 2
மாயையும் பொய்வசனிப்பும் என்னை விட்டு நீக்கி
வறுமையும் ஜஸ்வரியமும் தூரமாக வையும்... 2