என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.!
1.அலகையின் வலையினில் சிக்கினதால்அலங்கோலமாயிருந்தேன். - 2
என் வாழ்க்கையை அலங்காரமாக்கினீரே
அலங்கோலமான - 2 - என்னை அழகாக்க
2. அழுகையினால் என் படுக்கையை நனைத்து அழுது புலம்பி நின்றேன் - 2
அழாதே என்றீர் அருகினில் வந்தீர்
அழுகையை களிப்பாக்கினீர் - 2- என்னை அழகாக்க
3. அளவில்லாத எந்தன் பாவங்களால் அளவில்லா பாடடைந்தேன். - 2
அளவில்லாத உந்தன் பேரன்பினால் அளவில்லா அன்பு கூர்ந்தீர். - 2
என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.!
என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.!
உம் அழகை இழந்தீரே...!
பூரண அழகை இழந்தீரே....!.