என்னை நடத்துங்கப்பா
உங்க பாதையிலே
என்னை நடத்துங்கப்பா
உங்க வார்த்தையிலே - 2
உங்க கிருபையிலே
உங்க நீதியிலே
உங்க மகிமையிலே
என்னை நடத்துங்கப்பா - 2
1. அறுந்ததுணி அணிந்த காலத்திலெல்லாம்
அந்தஸ்து பார்க்காம தேடிவந்தீங்க - 2
2. நான்காணும் போராட்டம் பெரிதாயினும்
நான்பெறும் அற்புதமும் பெரிதாயிருக்கும் - 2
3. குற்றமில்லா மாசற்ற ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தினால் மீட்கப்படும் தகுதி தந்தீரே - 2