என்னை நீர் கழுவிவிடும்
உம் மகிமையால் மூடிவிடும்
உம்மோடு நடக்க... உம்மோடு இருக்க...
உம் சாயல் மாறிடவே உம் மகிமையை சேர்ந்துவிடவே -2
கழுவும்... என்னை கழுவும்....-2
உம் இரத்தத்தால் ( வார்த்தையால்) என்னை கழுவும்-2
1. எனது குற்றத்தை நான் அறிந்து உள்ளேன்
என் பாவங்கள் என் முன்பாக நிற்கிறது -2
உன் நீதி விளங்க இதை சொல்லுகிறேன் ( நிற்கிறேன்)
உம் பரிசுத்தம் விளங்க இன்று அறிக்கை செய்தேன்-2
2. ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்
உறைந்த மழையிலும் வெண்மை வேன் -2
சந்தோஷத்தால் என்னை மகிழ செய்யும் -உம்
நீர் நொறுக்கிய எலும்புகள் களி கூறட்டும் -2
3. நொருங்குண்ட ஆவியின் நிற்கின்றேன்
நருங்குண்ட இதயத்தோடு ஜெபிக்கிறேன் -2
உம் நிலைவரமான ஆவியை தாரும்
உற்சாகத்தின் ஆவியால் என்னை நிரப்பும்-2
4.கர்த்தாவே நீர் என்னை அறிந்து உள்ளீர்
நான் உட்காருதல் எழுதலையும் தெரிந்துள்ளீர் -2
உனக்கு வேதனை உண்டாக்கும் வழி வேண்டாம்
நித்திய வழியில் என்னை நித்தம் நடத்தும் -2