என்னை உமக்குத்தந்தேனே
ஏற்றுக்கொள்ளும் நாதா... - 2
என் வழி கொடியது
உம் வழி இனியது... - 2
எல்லாம் சமர்ப்பிக்கிறேன்
என்னை அர்ப்பணிக்கின்றேன்... - 2
கர்ப்பத்தில் என்னை தெரிந்துகொண்டீர்
காலம் எல்லாம் என்னை காத்து வந்தீர்... - 2
காருணியவான் நீர் அல்லவோ
கர்த்தாவே உம்மில் களிகூருவேன்... - 2
சேற்றிலிருந்தென்னைத் தூக்கிவிட்டீர்... -2
கல்வாரி இரத்தத்தால் கழுவி விட்டீர்... -2
உள்ளன்பினால் நேசித்தீரே
உத்தமரே என் நேசரே... - 2
வாழும் நாள் எல்லாம் உமக்காக... -2
செய்யும் செயல்கள் உமக்காக... - 2
உம்பாதங்கள் பின்தொடர்ந்தேன்
உன்னதத்தில் ஜீவிப்பேனே... - 2