என்னை உன் பொன் கைகளில்
ஒப்புவித்தேன் என் இயேசுவே
வெறும் மண்ணே நான் ஆனாலும் நீர்
உருவாக்கினீர் உம் போலவே - என்னை உன்
என் சித்தம் போல் நான் அலைந்தேன்
இளைப்பார இடமின்றி களைப்பாகினேன்
உம் சிலுவை நிழல் கண்டேன்
ஓடி வந்தேன் ஏற்றருள்வீர் - என்னை உன்
உம் பிள்ளையாய் நான் மாறவே
கறையாவும் களைகின்ற கரம் வேண்டினேன்
என் ஜீவனை அர்ப்பணித்தேன்
என்னை நீரே ஏற்றருள்வீர் - என்னை உன்