என்னைக் கொன்று போட்டாலும்
உம் மீது தானே நம்பிக்கையாய் இருப்பேன்
உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன்
அத்திமரமும் திராட்சை செடியும்
காலத்தில் பலன் தர மறந்தாலும்
ரட்சிப்பின் தேவனில் மகிழ்ச்சியாய் இருப்பேன்
கர்த்தரில் களிகூருவேன்
உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன்
உற்றார் உறவினர் பணம் பொருள் ஆஸ்தி
எல்லாம் என்னை விட்டு எடுபடினும்
என் ஆத்ம நேசர் என் மணவாளர்
மாறாத அன்பு போதும் என்று
உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன்