துதிப் பாடல்கள்

என்னிடத்தில் நன்மையென்று

Ennidathil Nanmaiyendru

என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2

நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2

நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரே

நன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2

1. ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையே

நம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையே

உம்மையே நம்பி இருக்கின்றேனே

சகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2

2. காத்திருந்து மனம் சோரும்போதும்

கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும்

காலங்கள் உம் கையில் இருக்கின்றதே

நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு