என்னோடுகூட வாருமே என் இயேசுவே
என் வாழ்வை மாற்றிடுமே என் இயேசுவே – 2
1. மனுஷனால் கூடாதது மருந்தால் தீராது
உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா
உம்மாலே எல்லாமாகுமே (2)
2. காற்றுக்கு கட்டளையிட கடலை அதட்டிவிட
உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா
உம்மாலே எல்லாமாகுமே (2)
3. மரித்தோரை எழுப்பிட செங்கடலை பிளந்திட
உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா
உம்மாலே எல்லாமாகுமே (2)