துதிப் பாடல்கள்

எப்ராயீமே உன்னை நான் எப்படி

Epraayeemae Unnai Naan Eppadi

எப்ராயீமே உன்னை நான் எப்படி கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை நான் எப்படி ஒப்புக்கொடுப்பேன்

நான் உன் தந்தை அல்லவா

நீ என் பிள்ளை அல்லவா

உன்னை அழைத்த தேவன் நான் எப்படி கைவிடுவேன்

உன்னை படைத்த தேவன் நான் எப்படி ஒப்புக்கொடுப்பேன்

எப்ராயீமே.... எப்ராயீமே...

உந்தன் வாழ்க்கை என் கையிலே

இஸ்ரவேலே... இஸ்ரவேலே...

என் சமூகம் உந்தன் முன்னே

1, தாய் தோன்றும் முன்னே உன்னை தெரிந்து கொண்டேனே

நீ என்னுடையவன்(ள்) என்று சொன்னேனே

உன்னை கைவிடுவேனோ நான் ஒப்புக்கொடுப்பேனோ

2, திகையாதே என்று சொல்லித் துணை நின்றேனே

உன்னை தாங்குவேன் என்று சொன்னேனே

3, பேர் சொல்லி அழைத்து உன்னை மீட்டுக் கொண்டேனே

நீ என்னுடையவன் என்று சொன்னேனே

4, இஸ்ரவேலே என்று சொல்லி உன்னை உருவாக்கினேனே

உன்னை மறக்க மாட்டேன் என்று சொன்னேனே

5, தாய் மறந்தாலும் மறவேன் என்று வாக்குரைத்தேனே

உன்னை உள்ளங்கையில் வரைந்து உள்ளேனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு