துதிப் பாடல்கள்

எரியுதுபார் அக்கினி

Eriyudhubaar Akkini

எரியுதுபார் அக்கினி கந்தக கடலே

அங்கே துடிக்குதுபார் பாவம் செய்த உடலே [அங்கே]

1. பாவத்தையே எடுத்து நாங்க சொன்னா

ரொம்ம கோபத்தோடு வெறுத்து தள்ளும் மனமே - [x2]

மனந்திரும்பு என்று வேதம் சொன்னா - 2

மனம் போனபடி திட்டுகின்ற ஜெனமே - 2

2. வசங்களை எடுத்து நாங்க சொன்னா

மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே - [x2]

நல்ல வழி என்று நாங்க சொன்னா - 2

நீங்க வந்தவழியே போங்கள் என்ற ஜெனமே - 2

3. நித்தியம் தான் உண்டு என்று சொன்னா

அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே

சத்தியம் தான் மீட்டும் என்று சொன்னா

நீங்கள் பைத்தியமோ என்றுரைக்கும் ஜெனமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு