எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
உங்க வார்த்தைக்கு ஈடாகுமா
ஸ்தோத்திரபலி கோடி சொன்னாலும்
உங்க பலிக்கது ஈடாகுமா -2
இயேசுவே உங்க வார்த்தையில்
ஜீவன் உள்ளது இயேசுவே உங்க வார்த்தையில்
வல்லமை உள்ளது-2
ஆறுதல் சொல்லக்கூட ஆளே இல்லாமல்
எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன்
எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன்(ஆறுதல்-2
நான் உன்னை மறப்பதில்லை
என்ற வார்த்தையை எனக்குத் தந்து ஆறுதல் தந்தீரே-2
கண்ணீரே எனக்கு உணவாய் மாறியதால்
துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே
துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே (கண்ணீரே-2)
நான் உன் கண்ணீரை துடைப்பேன் என்ற வார்த்தையை
தந்து கண்ணீரைத் துடைத்தீரே-2
இனியும் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல்
இதயம் கசந்து கதறினேன்
இதயம் கசந்து கதறினேன்-(இனியும்-2)
உனக்கு நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற
வார்த்தையை தந்து வாழ வைத்தீர்-2